கொரோனா; வழமைக்குத் திரும்புகிறது யேர்மனி; அதிரடி காட்டும் மேர்கெல்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக யேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் தற்காலிக சட்டங்களை தணித்து வழமைக்கு திரும்பும் நடவடிக்கைகளின் முதல் படியாக  ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் வரவிருக்கும் வாரங்களில் முதல்  பெருமம்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டவுள்ளது, எனினும்  பாடசாலைகள் மே 4 வரை மூடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 இன்று நாட்டுமக்களுக்காக உரையாற்றிய மேர்கெல்  800 சதுர மீட்டர் (8,600 சதுர அடி) வரையிலான கடைகள் "சுகாதாரத்தை பராமரிக்கும் திட்டங்கள்" கிடைத்தவுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார், அதே நேரத்தில் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையில்  பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும்.

 யேர்மனியில் ஒன்றரை இலட்சக்கணக்கானவர்களுக்கு வைரஸ் தொன்றியுள்ளபோதும் 5000 இறப்புகளை தாண்டாத வரையிலும் 70ஆயிரத்துக்கு மேற்பட்டோரை வைரஸ் பிடியிலிருந்தும் காப்பாறியுள்ள நிலையில், தங்கள் மருத்துவ வசதிகளின் அடிப்படையில் இந்த முடிவை யேர்மன் அதிரடியாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, இருந்தபோதும் வைரஸ் தொற்று தொடர்ந்துகொண்டிருப்பதனால் பெரிய பொது நிகழ்வுகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை இருக்கும் என்று கூறியுள்ளார்.

No comments