போர் தின்ற பூமி:வன்னியே கடைசியில்?


இலங்கையில் வன்னி தேர்தல் மாவட்டத்திலேயே ஆகக்குறைந்ததாக 2,87,024 வாக்காளர்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன்,  2019 வாக்காளர் இடாப்பு இம்முறை பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

162,63,885 பேர் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், தேர்தலில் வாக்களிப்பதற்கு அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 17,85,964 வாக்காளர் உள்ளனர்.

இதேவேளை, நாட்டில் குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் பதிவாகியுள்ளது. 

No comments