அமைதி ஒப்பந்தம் ஒருபுறம்! வான்வழித் தாக்குல் மறுபுறம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்க படை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்தக் குழுவின் தலைவருடன் "மிகச் சிறந்த பேச்சு" நடத்தியதாகக் கூறிய சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா சனிக்கிழமை தலிபானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால் அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:-

நேற்றுப் புதன்கிழமை ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் படைகளைத் தாக்கிய தலிபான் போராளிகளுக்கு பதிலளிக்கும் வகையில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

தாக்குதல்கள் குறித்து தலிபான்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பதும் உடனடியாகத் தெரியவரவில்லை.

No comments