பங்காளிகளை தோற்கடிக்க களமிறங்கும் பெரிய தலைகள்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு கடுமையான பின்னடைவை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தவிர்க்க முக்கிய பிரபலங்களை வெவ்வேறு மட்டங்களில் களமிறக்க முடிவு செய்துள்ளது..ஏற்கனவே யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வன்னியில் தேர்தல் களத்தில் முக்கிய அரச அதிகாரியொருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இம்முறை தேர்தலில் எவ்வாறேனும் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை தோற்கடிக்க தமிழரசு தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்கேதுவாகவே மூத்த அரச அதிகாரியொருவரை களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையில் அவ்வதிகாரியும் தயாராகிவருவதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள  தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் அனைத்துப்பெயர்களும் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments