யாழில் 50 மாணவர்கள் சற்று முன்னர் கைது?


“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அது சார் சந்தோச களிப்பில் ஈடுபட்ட 50 மாணவர்கள் ( சீருடையுடன்) யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள் என பொதுமக்கள் தொடர்ச்சியாக பொலிஸ் அவசர அழைப்பு மற்றும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.

No comments