படகெரிப்பாக மாறிய திருமலை மோதல்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறால்குழி பிரதேசத்தில் உள்ள நன்னீ எனும் இடத்தில் நேற்று (03) இரவு 5 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னீ பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மணல் அகழ்வு மற்றும் விற்பனை தொடர்பான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து நன்னீ மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments