கைது வலயத்துக்குள் 12 பேர்?

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் 12 பேருக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதிமன்றம் இன்று (04) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் நேற்று (03) அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களை கைது செய்வது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் மார்ச் 6ம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

No comments