அவர்களின் பிள்ளைகள் ஆயுதம் தூக்கவில்லை

கானாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களுடைய கண்ணீரில் அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுடைய பிள்ளைகள் எவருமே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி யோகராஜா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இன்று (13) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

எங்களுடைய உறவுகளை வலிகளோடும், வேதனைகளோடும் தேடிக்கொண்டு இருக்கின்றமே தவிர அரசியலுக்காக தமது  போராட்டத்தை நகர்கவில்லை.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் போனவர்கள் எவருமே பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனை தவறவிட்டுள்ளார்கள் என்றும் அவர் குற்றம் சுமந்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் இயக்குனரும் கானாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் போசகருமான அருள்திரு எஸ்.பீ.வி.மங்களராச தெரிவிக்கையில்,

சுமந்திரன் உட்பட ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என கூறுகின்றார்கள்.

அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்ததில் கூட்டமைப்புக்கு முக்கியமான ஒரு பங்கு இருக்கின்றது.

இனிமேலும் தேர்தலில் வாக்கு கேட்டு வெற்றியீட்டி மறுபடியும் ஏமாறத்தான் போகின்றார்கள். - என்றார்.

No comments