யாழில் தாவடி தனித்து வைப்பு?


யாழ்.குடாநாட்டின் உடுவில் தாவடி கிராமத்தின் ஒரு பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட
செயலர் மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்.குடாநாட்டில் ஆயிரத்து 729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 192 பேர் அரியாலை தேவாலய வழிபாட்டில் பங்கெடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிலும்; 80வீடுகள் கடுமையான கண்காணிப்பின் கீழிருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பு படைகளது கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களிடையே உரையாற்றுகையில் அதனை அவர் தெரிவித்துள்ளார்.

No comments