இத்தாலியில் கொரொனோவில் இருந்து மீண்ட முதல் வயதான பெண்மணி!

இத்தாலியில்  மிக வயதான 95 வயது பெண்மணி  ஒருவர்  கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் வடக்கு பிராந்தியமானது தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இத்தாலியில் இப்போது 53,578 பேருக்கு பரவியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 4,825 இறப்புக்களையும் சந்தித்துள்ளது.

இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அல்மா கிளாரா கோர்சினியும் மார்ச் 5 ஆம் தேதி பாவல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மருத்துவர்களும், நிபுணர்களும் அந்த மூதடியின் முன்னேற்றத்தை கவனித்துள்ளனர், அத்தோடு இத்தாலியின் வட மாகாணமான மொடெனாவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட முதல் நபராக இருப்பதக மருத்துவ அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

No comments