விடுதலைப்புலிகளுடன் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் அறிவரசன் மரணம்!

தமிழ் தேசியவாதியாகவும், தனது இறுதி நாட்கள் வரையிலும் தமிழ்ப்பணியற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் தேசியப் பேராசிரியர்அறிவரசன் அவர்கள் வயது மூப்பின் காரணத்தால் இயற்கை எய்தியுள்ளார்.

தமிழகம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1964முதல் 1996 வரை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவரும், கடையம் வஉசி தெருவில் வசித்து தமிழ்ப் பணியாற்றியவருமான பேராசிரியர் அறிவரசன் சிறந்த தமிழ்ப் பற்றாளரும் , தொண்டாளனுமாக திகழ்ந்தமையால்  2006ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் ஈழத்திலுள்ள ஆசிரியர்களுக்கும் போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தூய தமிழ் கற்றுக் கொடுக்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது , 2 வருட காலமக ஈழத்தில் தங்கி தமிழ் பயிற்றுவித்ததோடு, பல தூய தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் வர காரணமாகியுள்ளார்.

 தமிழகம் திரும்பிய அவர் போரின் பின்னராக புலம்பெயர் தமிழர்களின் கல்வி மேம்பாடிற்காகவும், தமிழ் வளர்சிக்ககவும்  பிரான்ஸிற்கு சென்று புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகளுக்காக இயங்கும்தமிழ் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்து தமிழாசிரியர் பயிற்சியும் அளித்தது தனது வாழ்நால்வரையும் அரும்தமிழ்ப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஈழ ஆதரவு சக்திகளில் மிகமுக்கிய ஆளுமையாகவும் விளங்கிய இவர் தனது 80 வயதில் இன்று மாலை (4-3-2020) கடையத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவரது உடல் நாளை நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட உள்ளதென  தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments