இணக்கத்திற்கு தயாரில்லை:ரணில் பாய்ந்தார்?


இணக்கப்பாட்டிற்கு வருகை தர ரணில் தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிரான பலமான போட்டி தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகியே வருகின்றது.

இந்நிலையில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் தரப்புக்களது முயற்சியை குழப்பி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, டுபாய் நோக்கி நேற்று (04) இரவு பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் அவர் பயணமாகியுள்ளார்.

இரவு 10.05 அளவில் அவர் டுபாய் நோக்கிய பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நேற்று காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments