நான் செத்தபின்பு என் பிள்ளையை யார் தேடுவார்?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் மாவட்டந்தோறும் மூன்றாவது ஆண்டினை தாண்டி பயணித்துவருகின்றது.இதன் தொடச்சியாக கிளிநொச்சி,வவுனியாவை தொடர்ந்து முல்லைதீவில்; மூன்றாவது ஆண்டு நிறைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதி யுத்ததத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படையினரிடம் கையளிக்கப்பட்ட முல்லைதீவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க அழைப்பின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments