சாம், சுமா, மாவை வெளியே?


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.அப்போராட்டத்தின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு கடுமையான பின்னடைவை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தவிர்க்க முக்கிய பிரபலங்களை வெவ்வேறு மட்டங்களில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வன்னியில் தேர்தல் களத்தில் வடமாகாணசபையின் மூத்த அரச அதிகாரியொருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள  தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் இம்முறை களமிறங்கவுள்ள வேட்பாளர்களமு பெயர்களும் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களிற்கு சந்தர்ப்பம் மீள வழங்கப்படவுள்ளதுடன் புதிதாக களமிறக்கப்படவுள்ளவர்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments