நேரகாலத்துடன் திறக்க ஆலோசனை!யாழ் மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை காலை 6 மணிக்குத் திறக்குமர்று வர்த்தக நிலைய உரிமையாளர்களிற்கு யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவித்தல்
விடுத்துள்ளது.


கொரோனோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு 6 மணித்தியாலங்கள் மாத்திரமே தளர்த்தப்பட்டுள்ள இவ் ஊரடங்குச் சட்டத்தால் அதிகளவான பொது மக்கள் வியாபார நிலையங்களிற்கு செல்லவுள்ளனர். ஆகவே நெருக்கடிகளைக் குறைத்து பொது மக்கள் நலன் கருதி காலை ஆறு மணிக்கே வர்த்தக நிலையங்களை திறக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் வர்த்தக நிலையங்களிற்கு செல்கின்ற பொது மக்கள் ஒரு வீட்டிலிருந்து ஒருவரைச் செல்லுமாறும் அதிகளவானோர் வர்த்தக நிலையங்களுக்கு உட் செல்ல வேண்டாமென்றும் கேட்டுள்ள வர்த்தக சங்கம் வர்த்தக நிலையங்களுக்குள் ஒரு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்குமர்றும் கேட்டுள்ளது.

No comments