இலாபத்தில் பங்கு கேட்கும் சுரேன்!


2018 ஆம் ஆண்டில் வரிக்கு பின்னராக 100 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தினை ஈட்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது
இலாபத்தின் 0.5விழுக்காட்டினை 03 நாட்களுக்குள் தேசிய அனர்த்த நிதியத்திற்கு வழங்க வேண்டுமென முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி அன்றண்டாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையினை கொண்டுநடத்தும் மக்களுக்கான நிவாரணமாக இருக்கும். தற்போது இலங்கையில் காணப்படும் முறைமையினை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொதுஜனபெரமுனவின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு சுரேன் இராகவன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments