சுயாதீனத்தை அடகுவைக்க தயாரில்லை!

இலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தாங்கள் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

கடந்த இரண்டரை வருடங்களாக, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மட்டும்தான் ஜனாதிபதி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

எமது அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடையாது. அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாதமையால், எதனையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது.

எனவே, மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது. இதனை ஜனாதிபதி நிச்சயமாக மேற்கொள்வார்.

பொதுத் தேர்தலில் எம்முடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்கவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்கவே இந்தக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜெனீவா விவகாரமும் அதிகமாக பேசப்படுகிறது. ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையின் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளதே ஒழிய, புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டை அல்ல. - என்றார்.

No comments