இளைஞன் பலி?

பொரளை,  பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க சந்தியில் இடம்பெற்ற  வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது விபத்தில் பலத்த காயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மோட்டார் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments