கருத்து முரணால் நடந்த கொலை?

எல்பிட்டிய  பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 27 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடே மோதல் ஏற்பட்டமைக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments