ரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு!

நடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள்.

அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments