கொழும்பில் அமெரிக்க பொங்கல்!


தேசிய பொங்கல் விழாவை புதிய ஜனாதிபதி கோத்தபாய நிறுத்திவிட கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரோ கோலாகலமாக இன்று பொங்கல் கொண்டாடியுள்ளார்.

தூதரக பணியாளர்கள் சகிதம் கோலம் போட்டு வெளியே கல் வைத்து பொங்கியதுடன் வாழையிலையில் பொங்கல் சாப்பிடவும் அவர் தவறவில்லை.

கொழும்பிலுள்ள சர்வதேச நாட்டு தூதரகங்களை மடக்கி வைக்க கோத்தா போட்டியிட அமெரிக்கவோ தமிழ் பொங்கலை கொழும்பிலேயே நடத்தியுள்ளது.

No comments