ஆள்பிடித்துக்கொடுக்கும் மைத்திரி!


புதிய நாடாளுமன்றில் சபாநாயகர் கதிரையினை மைத்திரி கண்வைத்துள்ளநிலையில் அதற்கேதுவாக கோத்தாவிற்கு ஆள் சேர்த்துக்கொடுப்பதில் அவர் மும்முரமாகியுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் இன்று (07) கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன்,  அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் குழுவொன்றை அமைக்குமாறு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆலோசனை  குறித்த முன்னேற்றம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

No comments