மாடு மோதி சிப்பாய் பலி?


ஓமந்தை பகுதியில் வீதியின் குறுக்காக நின்ற மாட்டுடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கின்றார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று  இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நகரை நோக்கி மோட்டா சைக்கிளில் பயணித்த குறித்த இராணுவ சிப்பாய், ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய மதுரசிங்க என்ற இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments