இலங்கையில் கொரோனா வைரஸா?; இறுதி அறிக்கை வெளியானது

அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது இறுதி மருத்துவ ஆய்வு அறிக்கையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு சீனப் பெண்கள் உட்பட நால்வர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் முதலாவது அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியான இறுதி ஆய்வு அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments