அமொிக்கத் தூதரகம் மீது மீண்டும் உந்துகணைத் தாக்குதல்கள்!

ஈராக் தலைநகரின் பாக்தாத்தில் பெரிதும் பலப்படுத்தப்பட்ட பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே ஐந்து
கத்யுஷா உந்துகணைகள் வெடித்துச் சிதறியுள்ளன.

இத்தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என அமெரிக்க கூட்டு நடவடிக்கை கட்டளைப் பீடம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சுடப்பட்ட ஐந்து உந்துகணைகளில் மூன்று அமெரிக்க தூதரகத்தை நேரடியாகத் தாக்கியது என்று பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உந்துகணைகள் உணவகத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமொிக்கத் தூதரம் மீது இந்த மாதம் மட்டும் மூன்று தாக்குதல்கள் இது போன்று நடத்தப்பட்டுள்ளன.

இதேநேரம் பல ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிவருகின்றனர். இப்போராட்டதை ஒடுங்குவதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 100 பேர் காயமடந்துள்ளனர்.

No comments