சீனாவில் இதுவரை 216 பேர் பலி

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (30) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 9 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதனர்.

அத்துடன் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 114 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments