முஸ்லீம்களை படையினர் தீர்மானிக்கமுடியாது?


முஸ்லீம் கல்வி மையங்களில் இலங்கை படைகளது தலையீட்டிற்கு எதிராக  போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு இராணுவத்தைப் பயன்­ப­டுத்­து­வ­த­னூ­டாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.
 அத்­துடன், பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்­கின்ற நிலையில்,  பிர­தமர் தனித்து சுயா­தீ­ன­மாக செயற்­ப­டாது மக்கள் பிரதி­நி­தி­க­ளிடம் பேச்சு நடத்தி ஆலோ­சனை பெற்று செயற்­பட வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்­துள்ளார்.
மேலும் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்­லூ­ரி­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், புதி­தாக மீண்டும் பதிவு நட­வ­டிக்­கை­களை ஏன் மேற்­கொள்ள வேண்­டு­மென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்­பி­யுள்ளார்

No comments