கூட்டமைப்பின் தலைவர் கதிரைக்கு பிரச்சினையில்லை!


தமிழ் மக்களது முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றான கூட்டமைப்பின் தலைவர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வுவந்துள்ளது.

கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவ பிரச்சனை இல்லை. அவ்வாறாக அடுத்த தலைமைத்துவம் தொடர்பான சந்தர்ப்பம் எழுமாயின் மாவை சேனாதிராசாவே தலைவராக பொருத்தமானவராக இருப்பார். கூட்டுத் தலைமைத்துவம் அவசியமற்றதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீவீ.கே.சிவானம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்குள் தலைமை குறித்து சர்ச்சையாக ஒன்றும் எழவில்லை. அரசல் புரசலாக ஒரு கதை ஊடகங்களில் வந்தது தான். ஆனால் அந்த மாதிரியான தலைமைத்துவப் பிரச்சனைகள் எங்களுக்குள் ஏற்படவும் இல்லை. அது கூட்டமைப்பிற்குள்ளேயோ அல்லது தமிழரசுக் கட்சிக்குள்ளோ எந்தவிதமான தலைமைத்துவப் பிரச்சனைகளும் கிடையாது.

சம்மந்தர் ஐயா தான் கூட்டமைப்பின் தலைவராக தொடர்வார். அதனுடைய பிரதித் தலைவராக மாவை சேனாதிராசா தொடருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments