கஞ்சாவுடன் பேரூந்து:தமிழன் பேருந்து தடுத்து வைப்பு?


வவுனியா- ஏ9 வீதியில் தாண்டிக்குளத்தில் இலங்கை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டதனையடுத்து கஞ்சா கடத்தி சென்ற வாகனமொன்று அகப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குணசேன நிறுவன மற்றும் பருத்தித்துறை அரச டிப்போ பேரூந்தை விடுவித்த காவல்துறை தமிழர் என்ற வகையில் பேருந்தை தடுத்து வைத்துள்ளது.அதில் பயணித்த தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுள்ளது.

வவுனியா புளியங்குளம், ஓமந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே நேற்றிரவு இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கஞ்சா பேருந்துகள் மூலம் கடத்தப்படுவதான தகவலையடுத்தே நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேருந்துகளில் கடத்தப்படுவது அகப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குணசேன நிறுவன மற்றும் பருத்தித்துறை அரச டிப்போ பேரூந்தை விடுவித்த காவல்துறை தமிழர் என்ற வகையில் பேருந்தை தடுத்து வைத்துள்ளது.

No comments