யாழிலும் சுவரோவியம் வரைதல் தீவிரம்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் வண்ணமயமான நகரம் திட்டம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்று வருகிறது.

நுண்கலைத்துறை மாணவர்கள் உட்பட சித்திரத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் வெற்றியினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் இளையோர்கள் தமது கற்பனைக்குள் உருவான அழகிய சுவரோவியங்களை வரையவுள்ளனர்.


No comments