சம்பிக்க சிறைக்கு:ஆதரவாளரும் கைது?


முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 
இதனிடையே உண்மைகளை புரட்டிப்போடும் நடவடிக்கையில் தெற்கு மும்முரமாகியுள்ள நிலையில் நியாயம் கேட்ட ஜக்கிய தேசியக்கட்சி பிரமுகர் ஒருவர் கைதாகியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றத்துக்கு இன்று (19) அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பகுதிக்கான முன்னாள் அமைப்பாளரின் மகனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பெனிஸ்டர் சார்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  அருகில் அண்மையில் குறித்த நபர் முன்னிலையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments