அரச பிரதானிகள் இருவருக்கு கடூழியச் சிறை!


20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதானியாக இருந்த மஹாணாம மற்றும் முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு இன்று (19) சற்றுமுன் சிறைத் தண்டனை விதித்து விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி மஹாணாமவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் திசாநாயக்கவுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 55 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments