தனித்து நாடாளுமன்றினை வெல்லுமாம் மொட்டு?

முஸ்லிம் மக்கள் தவ­றான எண்­ணங்­களில் இருந்து விடு­பட்டு, எதிர்­வரும் தேர்­தலில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என நீதி, மனித உரி­மைகள், சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

 ஜனா­தி­பதி தேர்தல் பெறு­பே­று­களின் பிர­காரம் எங்­க­ளுக்கு 120 ஆச­னங்­கள்­வரை பெற்­றுக்­கொள்ள முடியும். இதனால் சிறுபான்மையினர் இல்லாமலேயே எங்களால் பாராளுமன்ற பெரும்பான்மையயும் பெறமுடியும் என் அவர் பேசியிருந்தார்.

அதனால் முஸ்லிம் மக்கள் மீண்டும் சிந்­திப்­ப­தற்­கான வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. உங்­க­ளது உள்­ளங்­களை உங்கள் தலை­வர்கள் மாசு­ப­டுத்­தி­யுள்­ளனர். கோத்­தபாய ராஜ­பக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு நெருக்­க­டிகள் ஏற்­படும் என அவர்கள் உங்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். என்­றாலும் அவ்­வாறு எதுவும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. இந்த அர­சாங்கம் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்கு போன்று தமிழ்–முஸ்லிம் மக்­க­ளதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும். மீண்டும் நாட்டில் குண்டு வெடிக்­கப்­போ­வ­தில்லை.

அதனால் முஸ்­லிம்கள் பிழை­யான எண்­ணங்­களில் இருந்து விடு­பட்டு, எதிர்­வரும் தேர்­தலில் எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் .

No comments