கூட்டமைப்பு எமக்கும் விட்டுத் தர வேண்டும்; இராதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் உள்ள பல பாகங்களில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகக் கூறுகின்றது. ஆகவே நாங்கள் ஓரே இனம் என்ற அடிப்படையிலே வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீங்கள் போட்டியிடுங்கள். ஏனைய பகுதிகளை எங்களுக்கு விட்டுக்கொடுங்கள் என்றும் கூறினார்.

வவுனியா சாம்பல்தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments