புத்தாண்டுக்குள் வாள் வெட்டு குழுவை ஒழிப்போம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றனவெனத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியுமெனவும் கூறினார். 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

No comments