முன்னணி உறுப்பினர் விசாரணைக்கு அழைப்பு!


யாழ்.மாநகரசபையில் வீதி அமைத்த குற்றத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன் வரதராசா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 42 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதியொன்று 15 இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது. அது புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் வருவதனால் அவ் வீதியை புனரமைத்தமைக்காக புகையிரத திணைக்களம் பார்த்தீபன் வரதராசா மீது வழக்குத் தொடர முயற்சி எடுத்துள்ளது.

அதற்காக முதற்கட்டமாக இரயில்வே திணைக்களம் கொடுத்த முறைப்பாட்டின் அடைப்படையில் நாளை காலை 9.00 மணிக்கு யாழ்.காவல்; நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு முழுச்சிங்களத்தில் அழைப்பாணை வழங்கியுள்ளது.

புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் செல்லுகின்ற பாதைக்களை புனரமைக்க முடியாது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் ஒரு புத்த கோவிலினை புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் புகையிரத காணியில் கட்டமுடியும் என்றால் ஏன் என்னுடைய மக்கள் வாழுகின்ற வீதியினை புனரமைக்க முடியாது என பார்த்தீபன் வரதராசா வினாவிற்குள்ளாக்கியுள்ளார்.

No comments