மணல் கடத்தலிற்கு எதிராக ரெமீடியஸ் களத்தில்?


யாழ்.குடாநாட்டில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வில் இலங்கை காவல்துறையின் பின்னணியும் இருப்பதாக ஈபிடிபி சார்பு யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத் தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மணல் கொள்ளைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது. 

இதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த ஈபிடிபி சார்பு யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் அரியாலையில் கடமையிலுள்ள அனைத்து காவல்துறையினரையும் உடனடியாக இட மாற்றம் செய்யுமாறு கோரியுள்ளார்.

கலந்துரையாடலில் பங்கெடுத்த காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே குற்றச் சாட்டினை முன்வைத்த முடியப்பு ரெமிடீயஸ் மணல் அகழ்வது குறித்து காவல்துறைக்கு தொலைபேசியில் அறிவித்தால் சம்பவ இடத்திற்கு காவல்துறை வருகை தர முன்னரே கடத்தல்காரர்களிற்கு தகவல் செல்வதாக தெரிவித்தார்.

அந்த அளவிற்;கு காவல்துறைக்கும் மணல் கடத்தல்காரர்களுக்குமிடையில் நெருக்கம் காணப்படுகின்றது. அரியாலையில் கடமையில் இருக்கும் அத்தனை காவல்துறையினரையும் இடமாற்றம் செய்யுங்கள என முடியப்பு ரெமிடீயஸ் தெரிவித்துள்ளார்.

No comments