சங்கத்தானையில் விபத்து

தென்மராட்சி - சங்கத்தானை பகுதியில் இன்று (24) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மரச் சட்டங்களை (ரீப்பைகள்) முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவர் குறித்த சட்டங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் ஒருவர் இலேசான உராய்வுக் காயத்திற்கு உள்ளானார்.

அத்துடன் மற்றுமொருவர் கெண்டைக் கால் பகுதியில் முறிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments