சங்கிலி அறுத்தவர்கள் நையப்புடைப்பு

வவுனியா – பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அபகரித்துச் சென்றபோது இளைஞர்கள், பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (16) காலை 11.30 மணியளவில் வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அபகரித்து கோயில் குஞ்சுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் தப்பிக்க இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments