வெள்ளை வான் சாரதிகளுக்கு மறியல்

‘வௌ்ளை வான்’ சம்பவம் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டமை குறித்து கைது செய்யப்பட்ட அன்தோனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அத்துல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments