கைது செய்வதை தடுக்க நீதிமன்றம் சென்றார் ராஜித

"வெள்ளை வான்" ஊடக சந்திப்புத் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (19) முன் பிணை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வெள்ளை வான் ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்த பொய்களை தாம் வெளியிட்டதாக வெள்ளை வான் சாரதிகள் என்று அறியப்படும் இருவரும் சிஐடியில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையிலேயே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments