நீடிக்கும் இழுபறி:ஆளுநர் பணியாளர்கள் நீக்கம்!


வடக்கு மாகாண ஆளுநர் யாரென நாளொரு ஊகம் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்னைய ஆளுநர்கள் எவரும் திரும்பி பதவிக்கு வர சாத்தியமில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனின் பெயர் பேசப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவனின் தனிப்பட்ட ஊழியர்கள் நவம்பர் மாதம் 20ம் திகதி முதல் பதவியில் இருந்து நீங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நவம்பர் 28ஆம் திகதிய கடிதம் மூலம் தற்போதைய ஆளுநர் செயலாளர் சத்தியசீலனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இவ்வாறு பணி முடிவுறுத்தப்பட்டதாக ஆளுநர் செயலகத்தின் செயலாளர் கடிதம் வழங்கியுள்ளார்.

இதேநேரம் நவம்பர் 20ம் திகதிக்கு பிற்பாடு ஆளுநர் செயலக வாகனம் ஒன்று புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள ஆளுநரை அழைத்துவருவதற்காகவென முன்னாள் ஆளுநரின் தனிப்பட்ட ஊழியர் எடுத்துச் சென்றிருந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.எனினும் குறித்த பணியாளர் வேறு பதவிக்கெனவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆளுநரது உதவியாளர் பணியிலிருந்து முடிவுறுத்தப்பட்டுள்ளதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

No comments