பிரசேத்தை சுத்தமாக வைத்திருப்பது யாரின் கடமை; கூறுகிறார் மஹிந்த

தமது பிரதேசத்தை சுத்தமாக வைத்திருப்பது நகரசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த பொறுப்பு உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிவது சுற்றாடல் பொலிஸ் பிரிவின் பொறுப்பாகும். கழிவு பொருட்களை அகற்றுவது பொலிஸாரின் கடமை அல்ல.

இது தொடர்பில் பொலிஸார் செய்ய வேண்டியது என்னவெனில் கழிவு பொருட்கள் உரிய முறையில் அகற்றப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்துதல் மற்றும் அது தொடர்பாக இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும்.

கழிவு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை - என்றார்.

No comments