ஜி-20 நாடுகள் தலைமையை கைப்பற்றியது சவுதி

ஜி20 நாடுகளின் தலைமைப் பதவியை ஜப்பானிடமிருந்து சவுதி அரேபியா நேற்று (01) பொறுப்பேற்றுள்ளது என்று அல்ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் நவம்பர் 21, 22ம் திகதிகளில் இதற்கான மாநாட்டை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன.

இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவு திஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜி20 அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும்.

பழமைபேணும் நாடான சவுதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், சவுதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையிலும் ஜி20 தலைமைப் பதவியை சவுதி அரேபியா பொறுப்பேற்றுள்ளது.

மிக நீண்டகாலமாகத் தொடரும் மன்னராட்சியை விடுவித்து ஜனநாயக தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டுமெனக் குரல் கொடுக்கும் பலரை சவுதி அரசாங்கம் கைது செய்து, சிறையில் அடைத்து வைத்துள்ளமையும் பெரும் விமர்சனங்களாகி, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சவுதி அரேபியாவின் முடியாட்சிக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டதில் சர்வதேசத்தின் சந்கேம் சவுதி அரேபியாவின் பக்கமே திரும்பியிருந்தது. இந்நிலையில் ஜி20 அமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்ற சவூதி அரேபியா இச்சந்தேகங்களைப் போக்க வேண்டிய கடப்பாடுகளுக்குள் வந்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments