தமிழர் வாக்கு வங்கியை சிதைக்க புதுக்கட்சிகள்; டக்ளஸ்

தமிழ் மக்களின் வாக்குகளை உடைப்பதற்காகவே புதிய கட்சிகள் உருவாக்கப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் விடுவது கட்சியின் தீர்மானமாகும் எனத் தெரிவித்த அவர், மக்களுக்கு எது நன்மையோ அதனையே செய்வதாக குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரிய போது மக்களின் நன்மை கருதி ஆதரவு வழங்கியதாகவும் அதேபோன்று மக்களின் நன்மை கருதியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் விலகிச் செல்வதாகவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments