கடலை விற்கமாட்டேன் என்கிறார் டக்ளஸ்!


தீவகப்பகுதி மட்டுமல்ல நாட்டின் எப்பகுதியிலும் முதலீட்டாளர்கள் அந்தந்த பிரதேசங்களினது மக்களினதும் நலன் சார்ந்து செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.புலம்பெயர் தேச முதலீட்டாளர்களும் அவ்வாறு தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றார் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவகத்தில் கடற்தொழிலுக்கு வேற்றுப்பிரதேச முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் தரப்பு பாதிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கடந்த காலங்களில் இந்த அமைச்சில் என்ன நடந்ததோ எமக்கு அக்கறையில்லை. தற்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சக்கு நானே பொறுப்பாளி. அந்தவகையில் எனது அமைச்சில் அல்லது அதன் கட்டமைப்பில் எங்கும் ஊழல்களுக்கோ துஸ்பிரயோகங்களுக்கோ நான் இடமளிக்கப் போவதில்லை.

அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ள நான் விரும்பியிருக்கவில்லை. இந்நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் சமய தலைவர்கள் பொதுமக்கள் எமது கட்சி ஆதரவாளர்கள் என பலர் என்னை வற்புறுத்தியதற்கமையவே நான் இந்த அமைச்சை பொறுப்பேற்றேன்.  எனக்கு இன்று வழங்கப்பட்டுள்ள தேசிய ரீதியான அமைச்சானது எனது நல்லிணக்க அரசியலுக்காகவே ஜனாதிபதியாலும் பிரதமராலும் வழங்கப்பட்டது  எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.இதனிடையே அராலி முதல் மண்டைதீவு வரையான சுமார் இரண்டாயிரம் ஏக்கர் கடற்பரப்பினை தென்னிலங்கை முதலீட்டாளர்களிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments