ரணில் ஒய்வா:மறுக்கிறது ஜதேக?


முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மனித்துள்ளதாக வதந்திகள் பரப்பபடுவதாக சிறீகோத்தா வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தனது அரசியல் ஓய்வு குறித்து அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 1977ம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்திருந்தார்.

அந்த  வகையில் தனது 42 வருட அரசியலுக்கு எதிர்வரும் டிசம்பரில் விடைகொடுக்க தயாராகிவிட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என செய்திகள் வெளியாகியிருந்தது.

ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை சஜித் பிறேமதாசாவிற்கு விட்டுக்கொடுக்க இரா.சம்பந்தனும் ஆலோசனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments