ராஜிதவை உள்ளே தள்ள ராஜபக்ச குடும்பம் முயற்சி!


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னவை பொறியில் சிக்க வைக்க ராஜபக்ச குடும்பம் தயாராகிவருகின்றது.கோத்தபாயவின் வெள்ளை வான் விவகாரம் முதல் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் அவரே முன்னிறிருந்தார்.

இதனாலேயே அவரை பழிவாங்க ராஜபக்ஸ குடும்பம் தயாராகிவருகின்றது. 

இதனிடையே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோதபயா மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்ன இடையே சுருக்கமான சந்திப்பு ஒன்று இறுதியில் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்னவின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

இதன் பொழுது நாடாளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதியை ராஜித சேனாரத்ன வரவேற்றுள்ளார். பதிலுக்கு மரியாதையை செய்த ஜனாதிபதி கோத்தபாய , வேறு ஒன்றும் அவருடன் பேசவில்லை என்று தெரிய வருகிறது. 

ஏற்கனவே பதவியேற்ற அடுத்தநாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்ற ராஜித சேனாரத்னவை கோத்தபாய திருப்பி அனுப்பி இருந்தது குறிப்பி;டத்தக்கது.

No comments