நீதிமன்றம் கேட்கட்டும்; சுர்ஜித் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது குறித்து மழுப்பிய ஆணையாளர்;

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து இறந்த நிலையில் குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டதுபல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் எழிலகத்தில் இன்று மீட்பு பனியின் தலைமையேற்று நடத்திய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஊடகவியலாளர்கள் சுர்ஜித்தின் உடலை ஊடகங்களுக்கு காட்டவில்லை மற்றும் சில பாகங்கள் மட்டுமே மீத்கப்பட்டதாக செய்திகள் பரவுகிறதே எனும் கேள்விக்கு பதிலளிக்கையில்;

“ஏற்கனவே கும்பகோணம் தீ விபத்தின்போது குழந்தைகளின் உடலை புகைப்படமாக காட்சிப் படுத்தியதால் உலகம் முழுவதிலும் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன்பிறகு இறந்த உடலை மீட்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வழிகாட்டுதல் முறையை கொண்டுவந்தது. போரில் இறந்த வீரர்கள் உள்பட யாராக இருந்தாலும் சிதைந்த நிலையில் இருக்கும் சடலத்தை மீட்பதற்கென வழிகாட்டுமுறை உள்ளது. உடலின் அனைத்து பாகங்களும் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வு செய்யாமல், அதற்கென உரிய மரியாதையை அளித்துதான் உடலை அடக்கம் செய்தோம். குழந்தையின் உடலில் குறிப்பிட்ட பாகம் கிடைத்தது என்று குறிப்பிட்டால் நீதிமன்றம் எங்களை கேள்விக்குள்ளாக்கும்” என்று பதிலளித்த ராதாகிருஷ்ணன்,
“ஒவ்வொரு நொடியிலும் என்ன நடந்தது என்பதை சுஜித்தின் பெற்றோரிடம் தெளிவாக சொல்லியுள்ளோம். இந்த விஷயத்தில் ஆழமாக சென்றால் அது மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “குழந்தை மீட்புப் பணியில் இந்தியாவிலுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். பல கோடி ரூபாய் செலவு செய்தோம் என வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல் வெறும் வதந்திதான். மனித சக்திகளால் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அவை அத்தனையையும் மேற்கொண்டோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

No comments