துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கோரப்பட்டது

கிளிநொச்சி – அறிவியல் நகரில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை மதுவரி திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பாக வடமத்திய மாகாண உதவி மதுவரி ஆணையாளர் மற்றும் மேலதிக மதுவரி ஆணையாளர் தலைமையிலான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களது அதிகாரிகள் பிழை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரேநேரத்தில் தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் அதே சோனைக்காக வாடகை வாகனத்தில் சென்ற மதுவரித் திணைக்களத்தினர் மீது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் எனக் கருதி துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். இதில் ஊழியர் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments